விநாயகர்

விநாயகர் என்ற பெயர் இந்து சமய ஆண்பால் கடவுள்களுள் ஒன்றான யானை முகத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள உருவத்தை குறிக்கும்.

விநாயக்கடவுளின் உருவச்சித்திரிப்பு:

இந்து மத்தத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு இக்கடவுளை மையப்படுத்தியதே.இந்துக்களின் புராணக்கதைகள், இக்கடவுள், மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியவற்றின் பிள்ளையாக சித்திரிக்கிறது. முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் இக்கடவுள் கருதப்படுகிறது. இக்கடவுளின் வாகனமாக மூஞ்சூறு கருதப்படுகிறது.

பிள்ளையார்:

கணபதி - கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.ஆனைமுகன் - ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
கஜமுகன் - கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.விக்னேஸ்வரன் - விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்து கூறையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி,
குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.